உலகளவிய ரீதியில் தாவரங்களையும் காடுகளையும் பாதுகாப்பதற்காக பசுமைப்புரட்சியும் மீன்வள மேம்படுத்தலுக்காக நீலப்புரட்சியும் கோதுமை மற்றும் அதுசார் உற்பத்திகள் தொடர்பாக பழுப்புப் புரட்சியும் இறைச்சி மற்றும் உணவு சம்பந்தமாக சிவப்புப்புரட்சி தோற்றுவிக்கப்பட்டதற்கொப்பாக எமது தாய் நாடாகிய இலங்கைத் திருநாட்டைப் பொறுத்த வரையில் அதிகரித்து வருகின்ற வெப்ப உயர்வை இழிவாக்குதற் பொருட்டு சமுத்திரம் மற்றும் நீர் சார் வளங்களினதும் இயற்கையின் சேமிப்பகமாகிய காடு மற்றும் தாவர வளங்களினதும் நீடிக்க நிலைப்பை உறுதி செய்து அதன் மூலம் எதிர்கால சந்ததியினரின் வளம்மிக்க வாழ்வையும் உறுதிப்படுத்தகின்ற தொலைநோக்குப் பார்வையுடன் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலையீட்டுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட திட்டமே நீலப்பசுமை திட்டமாகும்
“மிக்க நலமுடைய மரங்கள் - பல
விந்தைச் சுவையுடைய கனிகள் - எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள் அங்கு
பாடி நகர்ந்து வரும் நதிகள்...................................” என்ற இயற்கையோடு இணைந்து வாழ்வியலில் இருந்த நிம்மதியையும் ஆறுதலையும் கொஞ்சங்கொஞ்சமாக அரும்பி இன்று பலவாய் பரந்து நிற்கும் தொழினுட்ப வளர்ச்சி புகோளமயமாதல் என்பவற்றின் எதிர்தாக்கங்களும் பறித்த விடலாகாது எனின் இயற்கைச்சூழலின் பலன்தருதன்மை குறித்து ஆராய்தலும் அதன் நீடித்த நிலைப்பின் பொருட்டு எம்மாலான பங்களிப்பை நல்குதலும் காலத்தின் தேவையாகும் .
அவ்வகையில் எம் நாட்டைப்பொறுத்த வரையில் பாதுகாக்கப்பட வேண்டிய பெருஞ்செல்வமாகிய நீர்வளம் குறித்து நோக்குவோமாயின் சமுத்திரங்கள், குளங்கள், குட்டைகள், ஏரிகள், கால்வாய்கள், நீர்வீழ்ச்சிகள், நிலத்தடிநீர் எனப் பல்கிப்பரந்துள்ளமை தெளிவாகும் . இதையே புவியியல் ரீதியின் நோக்குவோமாயின் ஏறத்தாழ புவியின் 71மூ ஆனது நீரினால் சூழப்பட்டது. அதில் 97.5மூ ஆனாது சமுத்திர நீராக உள்ளது.
அதே வேளை எஞ்சிய நீரிலும் பெரும்பகுதி கைகளுக்கெட்டாத வெகு ஆழத்தில் நிலத்தடி நீராகவும், பனிப்பாறைகளாகவும், வளிமண்டல நீராவியாகவும் விளங்கி 0.0007மூ இலும் குறைந்தளவான நீரே நன்னீராகப்பரவியுள்ளதாக புள்ளி விபரங்கள் வெளிப்படுத்துகின்றன. எமது நாட்டின் துரநோக்கான நீல அபிவிருத்தியை பொறுத்தமட்டில் புகோள அளவில் இலங்கை கொண்டுள்ள 532.619 சதுர கி.மி அளவிலான கடல் வளங்கள் 1,714,687 சதுர கி.மீ வரை விஸ்தரிக்கப்படுதல் - எனும் உயரிய நோக்கோடு நாடளாவிய ரீதியில் செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை சிறப்பானதாகும். இத்திட்டமானது முழுமையாக நிறைவேற்றப்படும் பட்சத்தில் உலகரீதியாகப் பேசப்படும் விடயமாக மிளிரும் என்பதில் ஐயமில்லை.
தக்கன பிழைக்கும் தகாதன அழிவடையும் என்கின்ற டார்வின் கூர்ப்புக்கொள்கைக்கு அமைவாக சர்வதேச ரீதியில் நடைமுறையில் உள்ள உலகமயமாதல் தத்துவங்களின் செயன்முறை காரணமாக புவி வெப்பமாதல் எனும் பாரிய பிரச்சினை புதாகாரமாக உருவெடுத்து வருகின்றமை கவனிக்கப்பட வேண்டியதென்றாகும். கைத்தொழிலின் விரும்பத்தகாத வெளியீடுகளான ஊகுஊ, மெதேன் வாயு, நைதரசனீரொட்சைட்டு, கந்தகவீரொட்சைட்டு, காபனீரொட்சைட் போன்ற பச்சைவீட்டு விளைவுகள் காரணமாக புகோள வெப்பமாதல் (Global warning) வாய்ப்புக்கள் அதிகரித்து வருகின்றது மேலும் வெளியேற்றப்படும் நச்சுவாயுக்கள், பார உலோகங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த விளைவாக ஓசோன் படை வறிதாக்கல் ஏற்பட்டு இறுதி விளைவாக ஓசோன்படை வறிதாக்கல் ஏற்பட்டு இறுதி விளைவாக ஓசோன்படையில் தூவாரமும் இடப்பட்டாயிற்று சூரியனிலிருந்து வருகின்ற சூழலுக்கு ஒவ்வாத கழியுதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து புவியைப்பாதுகாக்கின்ற குடையாகிய ஒசோன் படையில் ஏற்பட்ட துவாரங்காரணமாக புவி வெப்பமாதல் அதிகரித்தலுடன் கூடவே உயிரினங்களுக்கு உடல்ரீதியான நோய்கள், விகாரங்கள், பயிர்செய்கையில் விளைச்சல் குறைவு, புவி வெப்பமாதல், கடல் நீர் விரிவடைந்து கடல் மட்டம் உயர்வடைதல் காரணமாக தாழ்வான பிரதேசங்கள் நீரில் மூழ்கும் அபாயங்கள் ( உதாரணமாக மாலைதீவைக் குறிப்பிடலாம்) துருவப்பனிப்படலங்கள் உருக ஆரம்பித்தல், வெப்பநிலை முனைப்புக்கள் (extremes) ஏற்பட்டு வறட்சிக்கால பகுதிகள் அதிகளவில் உருவாதல் காலப்போக்கில் நீர்ப்பாற்றக்குறை அதிகரிப்பு போன்றன ஏற்பட ஏதுவாகிவிடும் ஆதலால் இதனைத்தடுத்தலின் பொருட்டும் எதிர்கால சந்ததியினரின் உறுதியான நிலவுகையில் பொருட்டும் செயற்றிறன் மிக்க சூழல் நேய நடவடிக்கைகள் அவசியமாகி வடுகின்றன. 1997 ஆம் ஆணடடில் ஜப்பானில் சர்வதேச அளவில் அபிவிருதா்ியடைந்த நாடுகளின் இணக்கத்தின் பொருட்டு நடத்தப்பட்ட கியோட்டோ பிரகடனம் காலநிலை மாநாட்டில் (Kyoto pro climate conference) நச்சுவாயுக்குறைப்புத் தொடர்பான பிரகடனம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடதக்கது.
எமது நாடான இலங்கை அன்றிலிருநது இன்றுவரை விவசாய நாடாகவே அறிமுகமாகின்றது. எமது முன்னோர்கள் வானிலிருந்து வீழும் ஒரு துளி நீரையேனும் விவசாயத்திற்குப் பயன்னடுத்தாமல் வீணாகக் கடலைச் சென்றடைய விடமாட்டோம் எனும் உயரிய நோக்கோடு செயற்பட்டனர். ஆசிய மடடத்தில் நோக்குகின்றபோது எமது நாடு எட்டியுள்ள சுற்றாடல் சார்ந்த அடைவுகள் பலவாகும். அந்தவகையில் குறிப்பிட்டால் உலகில் பதிவாகியுள்ள முதலாவது பாதுகாக்கப்பட்ட வனமாக இலங்கை நாட்டின் மிகிந்தலை மான் புங்கா இனங்காணப்பட்டுள்ளது மேலும் காடுகளில் வாழும் ஆசிய யானைகள் உயர் அடர்த்தில்யில் காணப்படுகின்ற நாடாகவும் பாதுகாக்கப்பட்ட வனங்களைப் பேணிக்காத்து வருகின்றது முன்னணி நாடாகவும் இலங்கையே மிளிர்கின்றது. மேலும் இலங்கையில் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ள தாவர வர்க்கங்களான 3200 இனங்களுள் ஏறத்தாழ 850 இனங்கள் அதாவது ஏறத்தாழ 25% ஆனவை இலங்கைக்கு உரித்தான நகருயிர்கள் மற்றும் ஈரூடகவாழிகளின் சதவீதங்களும் முறையே 50% ஆகவும் 51% ஆகவும் இனங்காணப்பட்டுள்ளன. மூலிகைத்தாவரங்கள் தொடர்பான மிகப்பொரும் பொக்கிசமாகவும் ஆசிய ரீதியில் எமது நாடே ஏற்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியிலான காலநிலை மாற்றங்களுக்கான முக்கிய காரணமாக இன்றளவில் இணங்காணப்படுவது காடழிப்பாகும் மெது நீடித்த நிலைப்பிற்காக, பசிக்கு உணவாக, உடுத்த உடையாகி, வாசிக்க வீடாகி, நோய்க்கு மருந்தாகி, பயத்தினை விடுத்த பயணங்களுக்கு சக்கரங்களாகி, வேலைகளில் கைளுக்கு கைகளாய் மாறி, எம் சுவாசத்திற்காக காற்றினை சலித்துக் கொடுத்து எமக்காய் மேகங்களை கெஞ்சி மழையைத் தருவித்து எம் கழிவுச் சுவாசத்தை உள்வாங்கி எனத் தம்மை முற்றுமாக நமக்காய் ஈயும் கற்பகத்தருக்களாக்கி மரங்களைப் பேணிக்காத்தல் பகுத்தறிவுள்ள மனிதர்களாக்கிய எம் தலையாய கடமையாகும் இதனை உணர்ந்த நம் இலங்கை அரசின் சீரிய நடவடிக்கைகள்யாவும் போற்றுதலுக்குரியனவே அவ்வாறாக இலங்கையின் பசுமை வளங்கள் எல்லாம் பரந்தளவான இயற்கைக்காடுகளாகவும் பாதுகாக்கப்பட்ட இயற்கை அரண்களாகவும், சரணாலயங்கள், தாவரவியற்புங்காக்களாகவும் தாங்கல் வலயங்களாகவும் விழித்து நோக்கப்படுகின்றது.
சுற்றச்சூழலைப் பேண்தகு விதத்தில் காக்க வேண்டின் அதற்கான முதற்படி சூழல்மீதான பற்றினை வளர்த்தெடுத்தலே எனின் மிகையல்ல அதன் பொருட்டு சூழல் குறித்த தெளிவுகளும் விளக்கங்களும் சூழலின் கூறுகள் குறித்த வி்யங்களும் சூழற்காப்பு என்றால் என்ன? அதன் பொருட்டு நடைமுறைப்படுத்தக்கூடிய ஆய்வுக்கான வாய்ப்புக்களும் மக்களிடையே ஏற்படுத்தித்தருதல் ஒவ்வொரு நாட்டினதும் தலையாய கடமையாகும் இதன் பொருட்டு எமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள சூழல்நேயக்கல்விமுறைமை சிறந்த உதாரணமாகும். சுற்றாடல்கல்வி என்பது (Environmental Education. EE) இயற்கைச்சுற்றாடல் எவ்வாறு தொழிற்பாடுகின்றது என்பதையும் குறிப்பாக மனிதன் பேண்தகு நிலையில் வாழ்வதற்காக தனது நடதடதைகளையும் சூழற்றொகுதிகளையும் எவ்வாறு முகாமை செய்யலாம் என்பதையும் கற்பிப்பதற்காக எடுக்கப்படுகின்ற ஒழுங்கு படுத்தப்பட்ட முயற்சிகளாகும் என வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளமை அழகே “சமூகமாற்றங்களைக் குழந்தைகளிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்பதற்ன கிணங்க பாடசாலைக் கலைத்திட்டங்களில் விசேட கற்கை உள்ளடக்கங்களாக சுற்றாடல் தொடர்பான பாடத்திட்டங்கள் இன்னமும் உட்படுத்தப்படுதல் வேண்டும் மேலும் உயர்கல்வித்திட்டத்தில் சூழல் நேயக்கல்வி தொடர்பான விசேட கற்கைநெறிகள் உருவாக்கப்படலும் விரிவாக்கப்படலும் மற்றும் ஆய்வுகள் கண்டுபிடிப்புக்களுக்கான வாய்ப்புக்களை அதிகரித்தலும் மேற்கொள்ளப்படின் இலங்கை நாட்டின் நீலப்பசுமை குறித்த இலக்குகளை எளிதில் எட்டிப்பிடித்து விடலாம் என்பதில் ஐயமில்லை
நீலப்பசுமை குறித்த எதிர்பார்ப்பில் கழிவுமுகாமைத்துவம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படல் வேண்டும். பயனுடைய யாதேனுமொன்றை உற்பத்தி செய்யும் செயன்முறையின் ஊடாக உற்பத்தியாகும் பயனற்ற பொருளே கழிவாகும். இன்றைய காலகட்டத்தைப் பொறுத்த மட்டில் பிரிந்தழிய இயலாத பொலித்தீன் பிளாஸ்டிக் பாவணையானது பின்னிப்பிணைந்ததாக மாறியுள்ளது. இன்னோரன்ன பாவனைகள் காரணமாக நிலச்சூழலும் மண்ணில் கீழ் வளரும் நுண்ணங்கிகள் மூச்சுத்தடை உபாதையாலும் (Suffocation) பாதிப்படைகின்ற அதேவேளை அவற்றை எரிக்கும் போது வளிச்சூழலும் கலக்கும் போது நீர்ச்சூழலும் ஒருங்கே பாதிப்படைய ஏதுவாகின்றது மேலும் கால்நடைகள் இவற்றை உணவெனக்கருதி மாய்ந்து போகும் அபாயமும் இற்றையில் இல்லாமல் இல்லை நீலப்பசுமை ஏற்படச்செய்யின் கழிவு முகாமைத்துவம் எனும் சித்தாந்தத்தின் விளக்கங்கள் பொதுமக்களை சென்றடைதல் வேண்டும். சர்வதேச அளவில் நடைமுறையில் உள்ள 3Rகோட்பாடுகள் அதாவது கழிவுகளைக்குறைத்தல் (Reduce) மீளப்பயன்படுத்தல் (Reuse) மீள்சுழற்சிப்படுத்தல் (Recycle) நடைமுறையில் நம் பிரதேசங்களில் அமுலாக்கப்படல் வேண்டும்.
நீலப்பசுமைத் தத்துவத்தில் நீல அபிவிருத்தின் மைல்கல்லாய் விளங்குகின்ற சமுத்திர - கடல் அபிவிருத்தி குறித்த இலங்கை அரசின் செயற்றிட்டங்கள் வலுவுட்ட வல்லனவாகவே அமைந்துவிடுகின்றன. அண்மையிலிருக்கும் நாடுகளில் மீன்வள அதிகரிப்பின் பொருட்டு நீலப்புரட்சி திட்டங்கள் அறிமுகமானவையும் நாம் அறிந்தவொன்றே சனத்தொகை வளர்ச்சியின் விளைவாக புமித்தாய் எமக்களித்த நிலம் போதாமற் போக காடுகளை அழித்து அங்கே குடியேறி சேனை விவசாயம் என்ற பெயரில் எஞ்சி இருக்கும் மிச்சம் மீதிக் காடுகளையும் எரியுட்டி வனவிலங்குகளின் பாதுகாப்பையும் சீர்குலைத்து அவற்றின் புகலிடங்களையும் அழித்து மரங்களைத் தாறுமாறாக வெட்டி மண்ணரிப்பை வரவழைத்து மண்ணையும் தரமிழக்கச் செய்து மழைவீழச்சியின் பொருட்டான மரங்களின் ஆவியுயிர்ப்பு வீதம் குறைவடைய ஏதுவாகி, மழை இன்மையால் வறட்சி ஏற்பட்டு நீர்நிலைகள் வற்றி அங்குள்ள நீர்வாழ் உயிரினங்கள் இறக்க நேரிட்டு ஒட்டுமொத்தத்தில் சூழற்சமனிலை நீரியல் வட்டத்தை எந்தெந்த வழிகளில் தடுக்க இயலுமோ அதையெல்லாம் பின்பற்றி நாகரிக மோகத்தால் இயற்கையை அழித்து செயற்கையைப் புகுத்தி என தவறான பாதையில் இன்றைய யுகம் செயற்படுவது கண்டு மனம் கொள்ளாத சூழல் நேய அமைப்புக்களின் உதவியாலும் நடவடிக்கைகளாலும் இன்னோரன்ன மனித செயற்பாடுகள் குறைந்து வருகின்றன என்றே கூறலாம். அவ்வாறான அமைப்புக்கள் பலவும் நம்நாட்டில் திறம்பட செயற்பட்டு வருதல் சிறப்பாகும்.
கடற்றொழில் நீருயிரின வளத்திணைக்களத்தால் (DFAR) மீன்பிடி முகாமைப்பிரதேசங்கள் முகாமை செய்யப்படுகின்றமை அறிந்ததே இவ்வாறாக கடற்றொழில் முகாமைப் பிரதேசங்களில் தாபிக்கப்பட்டுள்ள கமிட்டிகளால் அங்கு மீன்பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் முறைகள் மற்றும் உபரணங்கள் மேற்பார்வை செய்யப்படுவதோடு உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடித்தலும் முகாமை செய்யப்படுதல் அழகே மேலும் ஆசிய பிராந்தியத்தில் கரையோர வளங்களின் நீடித்து நிலைக்கக் கூடிய முகாமைத்துவத்துடனான ஒரு நாடு என்ற வகையில் இலங்கையை முக்கியத்துவப்படுத்தும் நோக்கோடு கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்திணைக்களம் செயற்பட்டு வருவதென்பது இளையோர் நாம் தெரிந்ததே.
உயிர்வளங்களை மற்றைய நாடுகளிடம் கிள்ளித் தெளித்த இயற்கை இலங்கை உள்ளிட்ட வெப்ப மண்டல நாடுகளிடம் அவற்றைத் தாராளமாக அள்ளிக்கொடுத்திருக்கின்றது. அவ்வாறான வளங்களுள் ஒன்றுதான் கண்டற்தாவரங்களும் கண்டற்காடுகளும் எனின் தவறல்ல கடற்கோள் (Tsunami) கற்றுத் தந்த பாடமாக கண்டல் நாற்றுக்களின் மீள்நடுமை நிகழ்ச்சித்திட்டங்கள் சர்வதேச ரீதியில் ஆங்காங்கே நடைமுறைப்படுத்தப்பட்டு வருதலைப் போலவே கண்டற் தாவரங்களின் இழப்பை குறைத்து இருப்பை நம் நாட்டில் உறுதி செய்வதென்பது இளையவர்கள் எமது பொறுப்பாகும். கண்டற்சூழல் நீர்வாழ் உயிரிகளின் நிலவுகையின் பொருட்டும் நீர்ப்பறவைகளின் தேவைகளின் தேவைகளைப் புர்த்தி செய்தலின் பொருட்டும் நீர்நிலை உணவுச்சங்கிலியின் முதலான உற்பத்தியாக்கிகளாகவும் பெரும்பங்கு வகிப்பதோடு மீன்பிடி உபகரணங்களின் நீடித்த பாவனையை உறுதிசெய்கின்ற தனின் சாயத்தை நல்குவனவாகவும் அலைகளின் வேகத்தைத் தணிக்கின்ற அலையாத்திக்காடுகளாகவும் கடலையும் நிலத்தையும் பிரிக்கின்ற எல்லைக்காவலர்களாகவும் இயற்கையில் பெரும்பங்கு வகிக்கின்றன.
இவற்றைப்போலவே முருகைக்கற்பாறைகளும் சமுத்திர - கடல்களுடன் ஒன்றித்தாகும். கடல் உயிரினங்களின் முட்டையிடுதல் குஞ்சு பொரித்தல் ஏனைய உயிர்களிடமிருந்தான ஆபத்து நிலைமைகளில் மறைவிடம் பெறுதல் போன்று பல தேவைகளை நிறைவேற்றுதல் மடடுமின்றி இயற்கை அழகை மெருகூட்டுதல் பொருட்டில் பெரும்பங்காற்றுகின்றன. இலங்கையைப் பொறுத்தமட்டில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற இடமாகவும் கூடவே அன்னிய செலாவணி சம்பாத்தியத்தை உண்டுபண்ணத்தக்க வளமாகவும் பவளப்பாறைகள் விளங்குதல் குறிப்பிடத்தக்கது. ஆயினும் நீலப் பசுமையைக் கண்ணுற்று அதன்பால் ஈர்ப்படைந்து எம்நாட்டில் உள்ள அவற்றைக் காண்பதற்காகத் திரளும் சுற்றுலாப் பயணிகளின் ஒரு சில நடவடிக்கைகள் கூட நம் நாட்டின் நிலப்பசுமையில் சிறிதும் பங்கம் விளைவிக்கவில்லை - என்பதை அடிக்கடி உறதிசெய்து கொள்ள வேண்டியவர்களாகவே நாம் உள்ளோம். இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவித்திக்குப் பொறுப்பான துறைகளும் அமைப்புக்களும் இது தொடர்பில் கூடிய கவனஞ்செலுத்துதலே உசிதமானது.
விவசாயிகளிடமிருந்து வெளியேறும் ஒவ்வொரு துளிவியர்வையும் மரங்களிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு துளி நீராவியும் பிராண வாயுத் துணிக்கைகளும் தான் முறையே எம் உணவு, நீர், சுவாசத்தேவைகளைப் புர்த்தியாக்குகின்றன பண்டைக்காலம் தொடங்கி இலங்கையரின் குருதியோடு உறவான விவசாயம் குறித்த போதிய நிறைவும் தற்காலத்தில் ஆராயப்பட வேண்டியதே 1960 ஆம் ஆண்டளவில் அறிமுகமாகிய பசுமைப்புரட்சியின் விளைவில் இரசாயன வளமாக்கிகள், விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகணங்களின் பயன்பாடு புதிய பயிர்போதங்கள் பண்ணை இயந்திர மயமாக்கப்படல் போன்றபல புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன இவற்றால் விளைச்சலில் அகரிப்பும் உள்ளுர் வெளியுர்சந்தை வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ள அதாவேளை எதிரான மறுதாக்கங்களும் இல்லாமல் இல்லை இரசாயனப்பசளைகள் மற்றும் களை நாசினி, பீடைநாசினிப் பாவணை அகரிப்பால் உணவே நஞசாக போய் விடுமோ எனும் நிலை உருவாகி விட்டது மனித உழைப்பு குறைவடைந்து இயந்திரங்களுக்கு அடிமையாகும் நிலை வெகுதுரத்தில் இல்லை இவ்வாறான இரசாயனங்களில் இருந்து வந்துசேரும் நைத்திரேற்றுக்கள் குடி நீரில் கலக்குமாயின் அது நீலக் குழந்தைகள் பிறப்பிற்கு வழிகோலி விடக் கூடிய அபாய நிலை உள்ளது மேலும் நீரின் துய்மையை தம் பங்கிற்க தொழிற்சாலைகளும் பலாத்காரம் செய்கின்றன. தொழிற்சாலைக் கழிவுகளுடன் வந்து சேரும் இரசம், கட்மியம், குரோமியம், ஈயம் போன்ற பாரவுலோகங்காளும் சயனைட்டு வேதிகளும் குடம் பாலக்கு துளி விஷம் போல நீரின் பாவனைக்கு உகந்ததல்லதாக மாற்றி விடுகின்றமை குறித்து கவனம் செலுத்தி அபாயத்தை குறைத்திட இளையார்கள் தாமே முன்வரால் வேண்டும் இன்றைய உலகின் எல்லாப்பிரச்சினைகளுக்குமான தீர்வு இளைய சமூதாயத்திடமே உள்ளது. என்பதற்ககேப்பா இளையாவர் நம்மிடமிருந்தான சூழலியல் தொடர்பான ஆக்கபுர்வ திட்டங்களுக்காக (Idealism) அரசு முன்னுரிமை அளித்து பரிசிலித்தல் நன்றே
இற்றையில் பெருகிவரும் குடித்தொகை வெடிப்பு (Population Explosion) எனப்படும் மிதமிஞ்சிய சனத்தொகை வளர்ச்சியின் காரணமாக ஏற்படுகின்ற தேவைப்பற்றாக்குறையினை ஈடுசெய்தாலின் பொருட்டு அதிகரித்த வருகின்ற அதிகபடியான வள நுகர்வுகள் காரணமாக இயற்கை வளங்கள் மிகவும் பாதிப்புறுகின்றன மட்டுமன்றி மக்கள் தொகையின் நலனுக்காக சுற்றுச்கசூழலை பலிகொடுத்தலைத்தவிர்த்து சூழலுக்கு உவர்பான மற்றுச்சக்தி வளப்பாவனை குறித்த ஆராய்ச்சிகளை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ள வேண்டும் இதற்கான கருத்துருவாக்கத்தேடல்களுக்கான சந்தர்ப்பங்களை இன்றைய வளரும் மாணவர்கள் மற்றும் இளையார்களுக்கான ஏற்படுத்தித்தருதால் தொடர்பில் அரசானது அதிககவனம் செலுத்த வேண்டும் இதன் பொருட்டு பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை எம் இலங்கை அரசு முன்வைத்து வருதலானாது பராட்டத்தக்கது ஆகும்.
இயற்கையை நாம் ஆதிக்கம் செலுத்தும் போது முதல் தலைமுறையில் எமக்கு ஆதாயம் இருப்பது போலவே தோன்றும் ஆனால் அடுத்த அடுத்த காலங்களில் இயற்கையே எமக்கு எதிராக திரும்பும். என்ற அறிஞர் எங்கெல்ஸ் அவர்களின் கூற்றினை நாம் நாடு நன்கு உணர்ந்த்தாகவே இருக்கின்றது அண்மைக்கால புகோளவெப்பமயமாகுதாலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நிகழ்ச்சித்திட்டங்கள் யாவும் வரவேற்கத்தக்கனவே ஐக்கிய நாடுகள் ரெட் (UN-RED) நிகழ்ச்சித்திட்டத்தின் இலங்கையின் வனவளத்தினைப்பாதுகாப்போம் எனும் நிகழ்வில் கலந்து கொண்ட எம் ஐனாதிபாதி அதிமேதகு நோக்கோடு வனஜீவ பாதுகாப்புக்காக தற்பொழுது உள்ள 29.7% வனப்பரப்பினையாவது எம?து ஏதிர்கால சந்ததியினருக்கானப் பாதுகாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும் இதன் முதற்கட்டமாக ஜனாதிபதி அவர்களின் வழிநடத்தலின் கீழ் வனப்பாதுகாப்பு அலுவலகத்துடன் இணைந்து வன ஜீவ பாதுகாப்பு அலுவலகம் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கான அலுவலகத்தினால் இலங்கையின் வனப்பரப்பினை 29.7% இலிருந்து 32% வரை அதிகரிக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை நாம் அனைவரும் அறிந்த மகத்தான விடயமாகும்.
“காடு நம் தாய் தாயிடத்தில் நாம் பால் குடிக்கலாமே தவிர, அவளின் இரத்தத்தையே உறிஞ்சிவிடக்கூடாது”
இதனை இலங்கையர் நாம் உணர்ந்த படியினாற்றான் சர்வதேச மட்டில், இலங்கையும் உயிர்ப்பல்வகையின் உறுத்துணர்ச்சி மிக்க இடங்களுள் (Biodiversity Hotspot) அடங்குவதாக இனங்காணப்பட்டுள்ளது உலகில் உள்ள பிரபல்யம் வாய்ந்த உயிர்ப்பல்வகைமை ஆய்வுகூடங்கள் 18 இல் எமது “சிங்கராஜவனம்” உள்ளடங்குவதென்பது பெருமையாகும்.
“வெட்டாதீர்கள் மழையைத் தருகின்றேன் - என்கிறது மரம்
வெட்டுங்கள் மழைநீரைச் சேமிக்கின்றேன் - என்கிறது குளம்”
என்கின்ற மகாவாக்கியத்திற்கு ஒப்பாக மழைநீர் சேகரிப்பின் பொருட்டு, மர மீள் நடுகைத்திட்டங்கள், மீள்காடாக்கல் நடவடிக்கைகள், குளங்களைப்பண்டைய முறையிலிருந்து மாற்றி நவீன புதுமைகளுடன் விரிவாக்குதல் திட்டங்கள், புணர்நிர்மாணத்திட்டங்கள் பலவும் எமது இலங்கையில் நடைமுறைக்கு வர்த்துள்ளமை பெருமைக்குரிய விடயமாகும். மேலும் நிலத்தடி நீரினை சேகரிக்க வேண்டிய விழிப்பணர்வுகளும் நாடளாவியரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கையின் மத்திய சுற்றாடல் அமைச்சின் சூழல் நேயத்திட்டங்களும் இலங்கையின் நீலப்பசுமைக்கு வளம் சேர்க்கின்றன.
ஒட்டுமொத்தமாக நோக்குகின்ற போது நீலப்பசுமை' தொடர்பான எதிர்பார்ப்புக்கள் குறித்ததான வாய்ப்புக்கள் நிகழ் காலத்தில் அதிகமாகவே உள்ளது. இத்திட்டத்தின் ஊடாக பசுமையான விவசாயம் பசுமையான சக்தி , பசுமையான போக்குவரத்து, பசுமையான நகரங்கள் மற்றும் பசுமையின் வேலை வாய்ப்புக்கள் போன்ற அடைவு மடங்கனை எமது நாடு வெகுவிரைவில் எட்டிப்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை எதிர்கால சமுதாய நலனுக்காக இளைய தலைமுறையினர் எமது பங்களிப்பும் நீலப்பசுமைத்திட்டத்தில் ஓங்கி ஒலிக்கும் இலங்கைத் தாயின் பசுமைக் குழந்தைகள் நாம் அனைவரும் வேற்றுமைகளை கடந்து ஒரு தாய் மக்கள் நாம் ஆவோம் என்ற சீரிய கொள்கை -யோடு செயற்பட்டு வாழவைக்கும் இயற்கைத் தாயை நீடு வாழவைத்து உலகின் அழகிய சொர்க்கபுரியாக எம் நாட்டை மாற்றிக்காட்டுவோம்!
Post a Comment