மீள்
என்றோ ஒரு நாள்
எல்லாம் மாறும்
அப்போது என் உதடுகள்
உண்மையாய் சிரிக்கும்
தொலைந்துபோன - என்
தைரியம் மீளக்கிடைக்கும்
இழப்புக்களின் இடைவெளி- மீள
நிரப்பப்படும்
இன்னும் அழகாய்
உயிரோட்டத்துடன்!
வெறுமை
காற்று வீச மறுத்தது
மலர்கள் வாசம் தரவில்லை
மொட்டுக்களும் மலர்தலை
மறந்தே போயின.
தேன் பருக மறந்த
வண்ணத்துப்பூச்சிகள்
இரைக்க மறந்த
வண்டினங்கள்
இறக்கை மறந்த
புள்ளினங்கள்
பச்சை இலைகளுக்குள்
ஏதோ ஒரு சோகம்
கனிகளிலும் முன் போன்ற தித்திப்பை
காணவே இல்லை
மின்மினிககளும்
ஏதோ காரணத்தால்
ஒளி வீசவே இல்லை
பட்டு பூச்சியும்
பட்டாம்பூச்சியும்
பேசிக்கொள்ளவே இல்லை
என் மனதின் வெற்றிடம்
இயற்கையிலும் பிரதிபலிக்க
ஏதோ ஒரு வெறுமை
எதனால்………?
ஏமாற்றம்
ஏமாற்றம்
எம்மாற்றம் தரினும்
எதிர்பார்ப்பில் மாற்றமே இல்லை
என்ன இது !
நாமம் சொல்வேன்
இதுவே
மானுடப்பயணம்……..
கேள்வி தொடு
கேள்விக்குள்
பதில் தேடும்
பலரின் நடுவில்
முற்றிலும் பதிலாய்……
கேள்வி - பதில்
புரிந்தவர் சிலர்
தேடலின் வெற்றி
பதில் என்றால்
தேடலின் தொடக்கம்
கேள்வி
ஆதலால்
பதிலில் நீ
கேள்வி தொடு
Post a Comment