சந்தேகம்
பாலின் சுவை
கசப்பதாய் தெரிந்தால்
பேச்சின் தித்திப்பு
குறைவதாய் நினைத்தால்
இணைந்த கரங்களில்
இடைவெளி உணர்ந்தால்
உறவு வலையில்
விரிசல் அறிந்தால்
தீப ஒளியில்
சலனம் தெரிந்தால்
நம்பிக்கை பண்டம்
காலாவதியாவதை உணர முடிந்தால்
மனதை
சற்று
தேற்றிக்கொள்
ஏற்றுக்கொள்
இது பிரிதல் திணை!!!
Post a Comment