பக்குவம்
இப்போதெல்லாம்,
நட்சத்திரம் எண்ணும்
நப்பாசையைக்
கைகழுவி
நாளாகுகிறது…
மழையை மழையாகவே
வெயிலை வெயிலாகவே
ஏற்றுக்கொள்ளும்
தன்மையை உணர்கின்றேன்
அதனதன் போக்கில்
இரசிக்கின்ற பொழுது
அத்தனையும்
கவித்துளிகள்………
பக்குவத்தின் சாயல் என
கேள்விப்பட்டிருக்கின்றேன்
அது
இதுவாகத்தான் இருக்கும் !!
Post a Comment