திறப்பு



தன்னைச் சுற்றி

முற்றிலுமாக

எழுப்பப்பட்ட

கூட்டினைக் கடப்பது

அந்த சிறிய பறவைக்கு

அவ்வளவு எளிதல்ல


 ஒவ்வொரு முறை

 காணும்  போதும்

 பூட்டினை திறந்து விட

 நினைத்து கொள்வேன்


 ஆனால்

 ஒவ்வொரு தடவையும்


 சாவியை எடுத்து வர மறந்து விடுகின்றேன்

 அல்லது

 சாவியை தொலைத்து விடுகின்றேன்

 இல்லையென்றால்

 சாவி தெரிந்தே திருட்டுப்போய் விடுகின்றது


 நிற்க! 

 இங்கு

 பறவை உவமானம்……….


Post a Comment

Previous Post Next Post

Android