அதிஷ்டங்கெட்டவள்


நிரம்பி வழியும்

கனவுக்குடத்தினை

சுமப்பவளின் முன்னே

அதிஷ்டங்கெட்டவள்

என்கின்ற வார்த்தையை 

நீ

உதிர்த்து இருக்கக்கூடாது


 தவறு இழைத்து விட்டாய்


இன்றுடன்

அவளின் கனவுகளோடு சேர்த்து

நிம்மதியும்

உறக்கமும்

பறிபோயிருக்கும்


இத்தனைக்கும்

அவள்

மௌனமாகவே

வாழப் பழகியவள்


Post a Comment

Previous Post Next Post

Android