ஓடு
முன்னேறுவதாய்
எண்ணம் இருந்தால்
முன்னே பார்த்து ஓடு
தயவுசெய்து
ஒரு தடவையேனும்
தவறிக்கூட
பின்னால் பார்த்து விடாதே
அங்கே சிலர்
பொம்மை துப்பாக்கிகளுடன்
பயம் காட்டுவார்கள்
இன்னும் சிலர்
புற முதுகில்
கல்லெறிய காத்திருப்பார்கள்
ஒரு சிலர்
வதந்திகளை தூவி
போக்கு காட்டுவார்கள்
ஒரு சிலர்
உன் வலி நிறைந்த
கடந்த காலங்களை
கை கொட்டி சிரிப்பார்கள்
காதுகளை
இறுக மூடிக்கொண்டே
முன்னே செல்
தவறிக்கூட பின்னால் திரும்பாதே
உன் பக்க நியாயத்தை
நிரூபிக்கும் நேரம்
நிச்சயமாய்
இது அல்ல
இலக்கை அடைந்த பின்னர்
ஒரே ஒரு தடவை மாத்திரம்
திரும்பிப்பார்!
முடிந்தால்
வெற்றிப் புன்னகையை
பலமாய் உதிர்த்து விடு
அவர்களுக்கு இதுவே தண்டனைதான்
Post a Comment