நீதிக்கு மரணமில்லை
நீதிக்கு
மரணமில்லை
வீணாய்
வாதித்தல் முறையுமில்லை
நல்லவை அறிந்து
போதித்தல்
வாய்க்குமானால்
அஹிம்சை வழியில்
சாதித்தல்
நன்றே ஆகும்
அது தவறின்,
கொள்கையணிந்து
நேர் கொள்ளல்
அறமே என்க!
காரணம்
நியாயமானால்
போராட்டம்
தோற்பதில்லை
தலைகீழாய் நின்றால் கூட
தர்மம்
வெல்லவே செய்யும்
………நீதிக்கு
மரணமில்லை…………
Post a Comment