1.ஒலி வேறுபாட்டுச் சொற்களை அறிவோம்
லகர, ளகர, ழகர வேறுபாடு
உலவு -உலவுதல்
உழவு -பயிர்த்தொழில்
கலை -வித்தை / ஆண் மான்
களை -நீக்கு / பயன்படாத வேற்றுப்பயிர்
தலை -சிரசு
தழை -தாவரம் ஒன்றின் இலை
வேலை -தொழில்
வேளை - பொழுது
நீலம் -ஒரு நிறம்
நீளம் - அளவைக் குறிக்கிறது
புலி - ஒரு மிருகம்
புளி -கறிக்குப் பயன்படுவது
வலை -மீன் பிடிக்கும் வலை
வளை -புற்று, வீட்டு வளை
வாளை -ஒரு வகை மீன்
வாழை -ஒரு மரம்
ரகர, றகர வேறுபாடு
அரி -அரித்தல்
அறி - தெரி, உணர்
அருகு -விளிம்பு
அறுகு- ஒரு புல்
இரக்கம் -மனவுருக்கம்
இறக்கம் - இறங்குகை, சரிவு
ஊரி - ஒரு வகைச் சங்கு
ஊறி -கசிந்து
கூரியது -கூர்மையுள்ளது
கூறியது-கூறப்பட்டது
தெரி - தெரிந்தெடு
தெறி -துளித் துளியாக விசிறுதல், பொத்தான்
பரி - குதிரை
பறி -பிடுங்குதல்
பொரி - வறு / தானியப்பொடி
பொறி - செதுக்கு, தீப்பொறி, எலிப் பொறி
னகர, ணகர வேறுபாடு
கனி - பழத்தைக் குறிக்கும்
கணி -கணித்தல்
கனை -கனைத்தல்
கணை -ஓர் ஆயுதம் (அம்பு )
தன்மை -குணம், மூவிடப்பெயர்
தண்மை -குளிர்மை
தினை -ஒரு தானியம்
திணை -சாதி, ஒழுக்கம்
பன் - ஒரு வகைப் புல்
பண் - பாடலுக்குரிய இராகம்
பேன் -தலைப்பேன்
பேண் -காப்பாற்று
2.ஒத்தகருத்துச் சொற்கள்
அழகு -வடிவு, வனப்பு
அறிவு -ஞானம், புத்தி
உடல் -மெய், சரீரம்
உண்மை- சத்தியம், வாய்மை
களிப்பு - உவகை, மகிழ்ச்சி
சினம் -கோபம், சீற்றம்
சுத்தம் -தூய்மை, புனிதம்
துன்பம் -துக்கம், இடர்
நித்திரை - துயில், உறக்கம்
உணவு - ஆகாரம், உண்டி
3.எதிர்க்கருத்துச் சொற்கள்
அண்மை - சேய்மை
ஆக்கம் -.அழிவு
இலாபம் -நட்டம்
இளமை -முதுமை
உயர்வு -தாழ்வு
உறவு - பகை
ஏற்றுமதி -இறக்குமதி
ஒளி -இருள்
சாதகம் -பாதகம்
ஞாபகம் -மறதி
நண்பன் -பகைவன்
சுத்தம் -அசுத்தம்
4.எதிர்ப்பாற் சொற்கள்
சிறுவன் - சிறுமி
செல்வன் -செல்வி
சேவகன் -சேவகி
தம்பி -தங்கை
புத்திரன் - புத்திரி
நண்பன் -நண்பி
பண்டிதன் - பண்டிதை
சீமான் - சீமாட்டி
நாயகன் -நாயகி
மாணவன் - மாணவி
வீரன் - வீராங்கனை
மருமகன் - மருமகள்
Post a Comment