ஒத்தகருத்துச்சொற்கள் 







1.  அகம் - மனம்


2. அச்சம்- பயம்


3.ஆரம்பம் -தொடக்கம்


4. இருள் -அந்தகாரம்


 5.ஈதல்- கொடுத்தல் ,தானம்


 6.உண்மை -மெய் ,சத்தியம்


 7.ஏழை- வறியவன்


 8.ஆழி - கடல்


 9 ஐயம் -பிச்சை


 10. பகலவன்- சூரியன்


 11.பூமி -உலகம், ஞாலம் ,தரணி


 12.மகிழ்ச்சி -  ஆனந்தம், களிப்பு,சந்தோஷம்


 13.உத்தரவு -அனுமதி


 14.நெருப்பு- தீ,  தழல்,  அக்கினி, அனல்


 15.பறவை - பட்சி, புள்


 16.யானை- கரி  ,வேழம்,  குஞ்சரம்


 17.வதனம்-  முகம்


 18.இலக்கு -  குறிக்கோள்


 19.சாலை -   வீதி, பாதை


 20.நட்பு  - தோழமை ,சினேகிதம்,  கேண்மை


 21.குதிரை- பரி  ,புரவி ,அசுவம் , மா



22. வனம் -காடு ,அடவி ,ஆரணியம்


23. அறம்  -தருமம்


24. பலன்- விளைவு


 25.குருதி -இரத்தம்


 26.சான்று -ஆதாரம்


 27.உடு  -நட்சத்திரம்


 28.வலிமை- வல்லமை, ஆற்றல் ,சக்தி


29. அழகு-  வனப்பு, எழில் , சுந்தரம்


 30.அரவம்- பாம்பு, சர்ப்பம்  ,கட்செவி


 31.பரிகாசம்-    ஏளனம்


 32.அகிலம்- பூமி


 33.போர்-  யுத்தம், சமர்,சண்டை


 34.பாராட்டுதல்- புகழ்தல்


 35.குருதி - இரத்தம்,  உதிரம், செந்நீர்


 36.மலர்-  பூ , புஷ்பம்


 37.குழந்தை-  சேய், பிள்ளை, குழந்தை ,மகவு  ,குழவி


 38.ஞானம்- அறிவு, தெளிவு


 39.புத்தகம்  -நூல் , பனுவல்


40. முகில் -மஞ்சம்,   கார்,   மேகம்


 41.மனைவி- இல்லாள், பாரியார்


 42.சோலை- பொழில் ,நந்தவனம், கா


 43.ஆசிரியர்- குரு, ஆசான், உபாத்தியாயார்


 44.துன்பம் -கவலை


 45.அத்தி-  யானை,  ஒருவகைமரம்


46. ஆறு -நதி ,ஓர் எண்  ,ஆறுதல் 


47. கலம்- கப்பல், பாத்திரம் ,ஆபரணம்


 48. மீன்- மச்சம்


 49. கல்வி- வித்தை 


 50.இலகு- சுலபம்


 51.வருடம்- ஆண்டு


 52.களைப்பு- சோர்வு


 53.வீடு -மனை ,இல்லம்


 54.ஆரம்பம் -தொடக்கம்


 55.கதிரை- நாற்காலி


 56.கணையாளி- மோதிரம்


57. கருமம்- செயல்


58. சூரியன் -இரவி, ஆதவன், பகலவன்


59. மாதம் -திங்கள்


60.  சிறந்த- நல்ல


 61.மரம் -விருட்சம்


 62.நாள்- தினம்


 63.அழகு -எழில் ,வடிவு ,வனப்பு ,இலட்சனம்


 64.முகம்- வதனம்


 65.கோயில் -ஆலயம்


 66.விருப்பம்   - ஆசை,வாஞ்சை


67. பெரிய- விசாலம்


68. கண்- விழி, நயனம்


69. போசனசாலை -உணவகம்


 70.ஊர்தி -வாகனம்


71.உறக்கம் -நித்திரை, தூக்கம்,  சயனம்


 72.முயற்சி- உற்சாகம்


 73.குரு- ஆசான், ஆசிரியர்


 74.அறிவு -புத்தி, விவேகம்


75. புத்திசாலி- அறிவாளி 


 76. வினா- கேள்வி 


 77.விடை -மறுமொழி


78. கர்வம்- செருக்கு, அகங்காரம், ஆணவம்


79. தரை -நிலம்


 80.அற்புதம் -அதிசயம்


 81.ஆச்சரியம்- வியப்பு


 82.கோபம்- சினம்


 83.ஆரவாரம்  -சத்தமிட்டு குழம்புதல்


 84.தொலைவில் -     சேய்மையில்


 85.அண்மையில் - கிட்டடியில், அருகில், பக்கத்தில்


 86.பத்திரிகை -செய்தித்தாள், புதினத்தாள்


 87.தினமும்- நித்தம்


 88.உறவினர்- சொந்தக்காரர்


 89.கிளி - கிள்ளை 


 90.தனு -வில்


 91.கணை- அம்பு


92. மேதை- அறிவாளி


93. தட்சனை -காணிக்கை


 94.அடுக்களை -சமையலறை


 95.உபதேசம்- போதனை


96. உறுமால்-  தலைப்பாகை 


 97.ஒப்பந்தம் - உடன்படிக்கை


 98.உண்டி- உணவு,போசனம்


 99.அகந்தை- செருக்கு


 100.வயல் -கழனி, புலம்


 101. பெண் -தையல், மாது , காரிகை


102. முத்து -நித்திலம்


103. உரை -பேச்சு


 104.மறை -வேதம்


 105. அரசன்- மன்னன், வேந்தன்


 106.நீதி- தர்மம், நியாயம்


 107.கோகுலம்  -குயில்


108. அந்தி - மாலை


Post a Comment

Previous Post Next Post

Android