வைராக்கியம்


உலர்ந்த  வயிறு

 கிழிந்த சேலை

 தளர்ந்த  பாவனை


 இழப்பதற்கு ஒன்றுமில்லை

 என்கின்ற தோரணை


 இருந்தும்


 வைராக்கியமான  அவளின்

 இழப்பு பட்டியலில்

 இதுவரை

 இவை  எதுவும்

 பதிவாகவில்லை


 அவள் அவளாகவே இருக்கின்றாள்

ஊழிக்காலம் -அவள் முன்னால்

 தோற்றுப்போகின்றது


Post a Comment

Previous Post Next Post

Android