சமாதானமாக வாழ்வோம்



இறைவனின் படைப்பில் நாம் அனைவரும் சமமானவர்களே. இருந்தாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக , முரண்பாடுகளும் ,வேற்றுமைகளும், மனக் கசப்புகளும் , போட்டி பொறாமைகளும் மக்களிடையே ஏற்பட்டு விடுகின்றது. இந்நிலை  நீங்கி  ‘மக்கள் அனைவரும் சமமானவர்களே’ என்கின்ற சிந்தனையை ஏற்படுத்த வேண்டுமாயின் கல்வியின் ஊடாக மட்டுமே இலக்கை அடையலாம்.


 அந்த வகையில்  ‘சமாதான கல்வி’  பற்றிய விழிப்புணர்வுகள்  சமூகத்தவர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு நாட்டினது முன்னேற்றம் சமூகத்திடமும், சமூகத்தின் முன்னேற்றம் நாளைய தலைவர்களாகிய மாணவர்களிடமும் தங்கியுள்ளமையை  கருத்திற் கொண்டு, சமமான கல்வியின் அவசியத்தைப் போலவே சமாதானம் பற்றிய  சிந்தனையும் மாணவர்கள் மத்தியில் விதைக்கப்படும் அவசியமாகின்றது.


 மாறிவரும் உலகில் மனிதர்களின் நடத்தைகளில் பல மாற்றங்களை அவதானிக்க முடிகின்றது. சாதி, மத, இன, மொழி பேதங்கள் . இனக் குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் ,  நாடுகளுக்கிடையிலான மோதல்கள் என விரும்பத்தகாத அல்லது  களையப்படவேண்டிய  எதிரும்-புதிருமான நடத்தைக் கோலங்கள்  ஊற்றெடுத்துப் போயுள்ளன.


 முதலாம் இரண்டாம் உலக மகா யுத்தங்களின் எதிர் தாக்கங்கள் இன்னமும் உலகில் நடந்த வண்ணமே உள்ளன. நாடுகளுக்கிடையிலான பூசல்கள் ,உள்நாட்டு பூசல்கள் இன்னமும் உருப்பெற்ற வண்ணம் உள்ளமை கவலைக்குரியதாகும்.  வீடுகளுக்குள்ளும் கூட உறவுகள் இடையே நெருக்கம் இல்லை .  நண்பர்களிடையே உண்மை இல்லை.  சண்டைகளும் சச்சரவுகளும் மலிந்து கிடக்கின்றன.



அன்பு வழியிலே நின்று அடையக் கூடிய நன்மைகளை மறந்து ஆயுதம் அடியில் பேசிக் கொள்கின்ற நிலைமையையும் என்று இல்லாமல் இல்லை. சமாதான பேச்சுவார்த்தைகளை மறந்த நாடுகளும்  ,மதிக்காத நாடுகளும் மலிந்து போயிருக்கின்றன.


 ‘அன்பும் சிவமும் ஒன்று’ என்கின்ற திருமூலரின் வாசகத்தையும் , ‘பகைவனையும் நண்பனாய் பார் பகுத்துண்டு வாழ்’ என்கின்ற நபிகள் நாயகம் அவர்களின் அறிவுரையையும் , ‘ ஓடும் உதிரத்திலும் வடிந்து ஒழுகும் கண்ணீரிலும் தேடிப் பார்த்தாலும் சாதி தெரிவதுண்டோ’  என்கின்ற புத்தர் வழிவந்த கவிமணியின் கூற்றையும் எம் சமூகம் மறந்துவிட்டு செயலாற்றுவது கவலைக்குரிய விடயமாகும்.

ண்மை இல்லை சண்டைகளும் சச்சரவுகளும் மலிந்து கிடக்கின்றன.


 இத்தகைய நிலைமை மாறவேண்டும் எனில் , உலகம் முழுவதும் அன்பு என்கின்ற மகாசக்தி சக்தி கொண்டு ஆளப்பட வேண்டும் எனின்,  சமாதானம் குறித்த தெளிவு மக்கள் மத்தியில் பெறப்படுதல் அவசியமாகின்றது. 


 அந்த வகையில் , விவேகானந்தர் அவர்கள் கூறுவது போல,  சமூக மாற்றத்தை குழந்தைகளிடமிருந்து உண்டுபண்ண வேண்டும் . அந்த வகையில்  ‘சமாதான கல்வி’  பற்றிய விழிப்புணர்வுகள்  சமூகத்தவர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு நாட்டினது முன்னேற்றம் சமூகத்திடமும், சமூகத்தின் முன்னேற்றம் நாளைய தலைவர்களாகிய மாணவர்களிடமும் தங்கியுள்ளமையை  கருத்திற் கொண்டு, சமமான கல்வியின் அவசியத்தைப் போலவே சமாதானம் பற்றிய  சிந்தனையும் மாணவர்கள் மத்தியில் விதைக்கப்படும் அவசியமாகின்றது.

.

ஆரம்பக் கல்வியில் இருந்தே ‘ ‘சக மக்கள் அனைவரும் சமமானவர்கள்’  ‘நாம் அனைவருமே ஒரு தாய் வயிற்றில் குழந்தைகள்’ என்கின்ற தாரக மந்திரத்தை ஒவ்வொரு பிள்ளையின் மனதில் விதைக்க வேண்டியது சமூகத்தின் தலையாய கடமையாகும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வாழ வேண்டியதன் அவசியம் எப்போது உணரப்படுகின்றதோ அப்பொழுது தான் மனிதன் மனிதனாக வாழ்வதன் முழுமை  -முழுவதுமாக எய்தப்படும் . 


Post a Comment

Previous Post Next Post

Android