சீதனம்


  காசு வாங்கி 

 களிக்கச் செய்பவள்

 விலைமாது என்றால்,


 காசு வாங்கி

 களிப்பையும் அடைபவன் 

 பெயர் என்ன?


பணத்தைப் பெற்று

 உடலைத் தருபவள்

 தாசி என்றால்,


 பணத்தைப் பெற்று

 உடலையும் பெறுபவன்

  நாமம்  என்ன?


‘ஆண்கள் விற்பனைக்கு’

 திருமணச் சந்தையிலே…..


Post a Comment

Previous Post Next Post

Android