ஆசிய நாடுகளின் சுதேச கலாசாரங்களில் உலகமயமாதலின் தாக்கம்


 ‘அனைத்தும் அனைவருக்கும்’ என்னும் தாரக மந்திரத்தின் அடிப்படையில்  உருவானதே  ‘உலகமயமாதல்’ என்ற எண்ணக்கரு.


‘The process by which business or other organization develop international influences or start operating on an international scale.’ என உலகமயமாதலை வரைவிலக்கணம்ப்படுத்தலாம்.  

தக்கன பிழைக்கும் தகாதன அழிவடையும் - எனும் டார்வின் அவர்களின்

கொள்கைக்கு அமைவாக பூகோளமயமாதலின் தாக்கங்கள் ஆசிய நாடுகளிலும்

ஓங்கி ஒலித்துக் கொண்டிருப்பதை கண்முன்னே காண்கின்றோம். 


அரசியல், பொருளாதாரம், கலை, கலாசாரம் அனைத்து துறைகளிலும்

பூகோளமயமாதலின் தாக்கம்  உள்ளமையை அவதானிக்க முடிகின்றது. 

உலகமயமாதல் எனும் எண்ணக்கரு மனித இனம் தோன்றிய காலம் தொட்டு

நடைமுறையில் இருப்பினும் 1981 ஆம் ஆண்டு அளவிலேயே சர்வதேச ரீதியில்

பிரபலமடைந்தது.


உலகமயமாதல் என்பது ஒவ்வொரு பொருண்மிய சார்புடையது.  உலகமயமாதல்

என்பது முதலாளித்துவ பண்புடையது.

உலகமயமாதலின் ஒட்டுமொத்தமான மாற்றத்தினை உலகின் எந்த ஒரு

பிரிவினரும் நிராகரிக்கவும் முடியாத ஒரு இயங்கியல் நடைமுறை ஆகும். 


 உலகமயமாதல் எனும் தத்துவத்தின் பேரில் முதலாம் உலக நாடுகள் பெரும்

வளர்ச்சியை காண்கின்ற அதேவேளை இலங்கை உட்பட ஏனைய ஆசிய

நாடுகள் பலவும் நசுக்கப்படும் நிலை வேதனைக்குரியது.   உலகமயமாதலின் 

திணிப்பின்  காரணமாக நாம்  அடைந்த   நன்மைகளைக்காட்டிலும்  தீமைகளே

அதிகம் .  ..


ஒரு நாட்டுக்கான அடையாளத்தை தேடித்தருகின்றதும், நாட்டினை

பிரதிநிதித்துவப்படுத்துவதும் ஆன,  ‘பாரம்பரிய கலாசாரமானது’ உலகமயமாதல்

என்கின்ற பெயரிலே சிதைக்கப்படும் நிலை இன்று உள்ளது.


 சர்வதேசம் முழுவதும் ஒற்றைக்கலாச்சாரம் எனும் நிலையை  தோற்றுவிக்கும் பொருட்டு,  மூன்றாம் உலக நாடுகள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ள ஆசியாவின் சுதேச பாரம்பரிய கலாசாரங்கள்

மெல்ல மெல்ல   அளிக்கப்படுகின்ற விரும்பத்தகாதது.


ஒரு மொழி அழிந்து விட்டால்,  அம்மொழி சார்ந்த பண்பாடு- கலாசாரங்களும்

அழிந்துவிடும். ஆனால், இன்றைய சூழலில் உலகளாவியரீதியில் ஏறத்தாழ 5000

மொழிகள் அழிவடையும் நிலையில் இருக்கின்றன.

.

 உலகமயமாதலின்   பிரசவங்கள் ஆன  இணையம், சினிமா, தொலைபேசி 

தொலைக்காட்சி………… போன்றவற்றை பயன்படுத்தி  மக்கட்சமுதாயம்  

ஒருபுறம்  முன்னேறிக் கொண்டிருக்கின்ற  அதேவேளை, மறுபுறம் அவற்றின்

வருகையால் நாகரீக மாயை எனும் வலைக்குள் சிக்குண்டு   ஏனைய கலாசாரங்களை நகல் செய்து , 

கலாசார சீரழிவுகள் பலவற்றை ஏற்படுத்தும் நிலைமைகளும்  ஏற்பட்டுள்ளது  .


அபிவிருத்தி அடைந்த நாடாகிய அமெரிக்கா போன்ற வல்லரசுகள்

தமது முன்னேற்றத்தின் பொருட்டு அபிவிருத்தியடைந்துவரும் ஆசிய

நாடுகளின் மூலதனங்களையும் , மூளை வளங்களையும் சுரண்டி ,

தம் நாட்டில் உற்பத்தி பொருட்கள் ஆக்கி , அவற்றை மீண்டும் வளர்முக

நாடுகளுக்கு இறக்குமதி செய்து , இந்நாடுகளின் தன்னிறைவு பொருளாதாரத்திற்கு

முட்டுக்கட்டையாக திகழ்கின்றன என்பது கசப்பான உண்மையே..


தேசபக்தி என்பது குறித்து நாட்டு மக்களால் தம் நாட்டின் மீது

கொண்டுள்ள பற்று எனலாம். ஆனால் இன்று உலக உலகமயமாதற்சூழலில்

இந்த பற்றும்  பறிபோய்விடுமோ -என்ற ஏக்கம் எழுந்து உள்ளது .


தாய்நாட்டிடமிருந்து தரமான கல்வியைப் பெறுகின்ற நாங்கள், எதிர்காலத்திலதாய்நாட்டு சொந்தங்களுக்காக , தாய்நாட்டிலேயே அல்லவா பணியாற்ற

வேண்டும்  ? ஆனால் இன்று என்ன செய்கின்றோம் ?  கவர்ச்சியான சம்பளம் ,

பகட்டான வாழ்க்கை ,  வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக தன் நாட்டை

புறக்கணித்து முதலாம் உலக நாடுகளிடம் தஞ்சம்  புகுவதென்பது

விரும்பத்தகாததாகும்.


வளர்ச்சியடைந்த நாடுகளின் தலைமையில் ஆசியாவில் தலையெடுத்துள்ள

உற்பத்தி பொருட்களாலும்,தொழிற்சாலைகளாலும்  சுற்றுச்சூழல் மிக மோசமாக

பாதிக்கப்படுகின்றன .எமது மூதாதையரிடம் காணப்படாத புதுப்புது நோய்களும்

இன்றைய நாட்களில்,  எம்மவர் மத்தியில் மலிந்து கிடக்கின்றது. உலகளாவிய

பிரசித்தி  பெற்ற இந்திய-சீன ஆயுள்வேத  மருத்துவங்களை அழிக்கும் நோக்குடன்

மேற்குலக மருத்துவ உலகம்  செயற்படுவதை  தினமும் காண்கின்றோம்.


புதிய புதிய சமூ வலைத்தளங்களின் விளைவால்,  தனிமனிதர்கள் பலரும்

உறவுகள்- நண்பர்களிடமிருந்து வெகுதூரம் சென்று தனி தீவுகள்போல திகழ்வது - என்பது ஆரோக்கியமான விடயமல்ல. நம் கலாசாரம்

கூறுகின்ற ஒற்றுமை, புரிந்துணர்வு  , கூட்டுறவு போன்ற கலாசார பண்புகளும்

சிதைந்து விடுமோ -என்ற அச்சம் எழுந்துள்ளது.


விண்ணைத் தொடும் அடுக்குமாடி கட்டிட காடுகளுக்குள் எண்ணற்ற

உற்பத்திப் பொருட்களும் இலத்திரனியற் பொருட்களும் வந்து குவிந்து

கிடக்கின்றன. தேவை பற்றாக்குறை இல்லாமல் இன்றைய  பொருளாதாரம்

முயல்கின்றது. எது எவ்வாறு இருப்பினும் மனித மூளைகளை காட்டிலும்

இயந்திரங்களை நம்புகின்ற கலாசாரம் வந்துவிட்டது. இயந்திர சாதனங்களின்

  வருகையுடன் வேலையில்லாப் பிரச்சினையும் பெரும் திண்டாட்டமாக உருவெடுத்து

வருகின்றது..


 இவை அனைத்துக்கும் அப்பால் விவசாய நடவடிக்கைகளுக்கு பிரசித்தி பெற்ற

ஆசியாவில் விவசாயம் சீர்குலையும் நிலைமையும் விவசாயிகளின்

பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளமை வருந்தத்தக்கது.


முடிவாக,  பூகோளமயமாதல் என்கின்ற  எண்ணக்கருவிலிருந்து எமது

நாட்டினை பாதுகாக்க வேண்டுமெனில்  , தனிமனிதர்கள் ஒவ்வொருவரினதும்

சிந்தனையிலும் செயற்பாட்டிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். தன்னிறைவு

பொருளாதாரம் குறித்து நாட்டு மக்களின் கவனம்  திசை திருப்பப்படுதல்

வேண்டும். விவசாயம் மற்றும் உள்ளுர் உற்பத்திகளின் திறமையும் ,

  உள்ளூர் கண்டுபிடிப்புகளின் பெருமையும் மக்களால் உணரப்பட வேண்டும்.

தாய் நாட்டின் இறைமை காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு குடிமகனின்

கடமையாகும்…


எனவே சிந்திப்போம் !செயற்படுவோம் ! !விழிகளால் நல்லவற்றை மட்டுமே

காண்போம்…!!!   நாளைய உலகம் நமக்காய் அமையட்டும்….!


Post a Comment

Previous Post Next Post

Android